"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: ரஜினி

6.10.10

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக நேற்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.


பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினகாந்த்
பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி எனக் தெரிவித்துள்ளார். பி.டி ஐ நியுஸ்

ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


இப்ப மேட்டருக்கு வருவோம்…


மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் நம் இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள்..


இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர். யார் இந்த ரஜினிகாந்த என்ற உண்மையை இந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும். முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் பால் தாக்ரே. இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.


அப்படி எனில் கடவுளின் கொள்கையை (பாசிசம்) தான் பக்கதனும் (ரஜினி) பின் பற்றுவார் என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது.


பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக் கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த்.


நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக் கொள்வதற்கு சமம்..


நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது..


இனிமேலாவது திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP