"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


கருப்பு சட்டங்களை எதிர்ப்போம்

12.10.10

சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) ஆயுதபடைகள் சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) போன்ற கருப்பு சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என பிரசித்தி பெற்ற மனித உரிமை ஆர்வலரும் அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பின் துணை தலைவருமான பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.


மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கு கோழிக்கோடு நலந்தா ஆடிடோரியத்தில் நடைபெற்றது அப்போது இதனை தெரிவித்தார்
கடுமையான ஆள்தூக்கி சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது ஆபத்தானது ஜனநாயக மாண்புகளில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரது கடமை இது போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது என் குறிப்பிட்டார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP