"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

19.10.10

அன்புமிகு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.


விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிமை பெற்றுள்ளனர்.


அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும், M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.


இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.

em1.jpg
em2.jpg


நீங்கள் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.


இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் / வலைப்பூ / இணையதளம் / செய்தி ஊடகம் / தொலைகாட்சி / சொற்பொழிவு / நிகழ்ச்சி / தொலைபேசி / தொலைநகல் வாயிலாக தெரிவியுங்கள்.


நன்றி! வஸ்ஸலாம்.

தகவல்:
கோவை மவ்லவீ அ. அப்துல் அஜீஸ் பாகவீ &
காயல்பட்டினம் மவ்லவீ சுல்தான் சலாஹுத்தீன் மழாஹிரி


1 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ October 19, 2010 at 8:20 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்...

முஸ்லிம்களுக்கு உபயோகமான அவசிய பதிவு. நன்றி.

நானும் இன்ஷாஅல்லாஹ் எனக்கு முடிந்தவரை தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை கொண்டு போய் சேர்ப்பிக்கிறேன்.

//இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.//---இது எனக்கு திறக்கவில்லை. சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP