"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பாபரி மஸ்ஜித் தீர்ப்பைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட முஸ்லிம்கள் கைது!

20.10.10


450 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சின்னமும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமுமான பாபரி மஸ்ஜித் தேசத் துரோக சங்பரிவார்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை நாம் அறிவோம்.


இது இந்திய தேசத்திற்கே மிகப் பெரிய அவமானமாகவும், தலைக் குனிவாகவும் உலக அரங்கில் இருந்து வருகின்றது.


பாபரி பள்ளிவாசல் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் சரியாகவும், முறையாகவும், நீதியாகவும் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தபோது நெஞ்சில் இடியாக வந்தது அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.


பள்ளிவாசல் இடத்தை மூன்று பங்காக வைத்து எந்தவிதமான சட்ட அடிப்படையோ, ஆவண அடிப்படையோ இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்துத் தீர்ப்புப் போல் வழங்கியது இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது. கண் முன்னால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது கண்டும் நீதி கிடைக்கவில்லையே என்ற வேதனை, கொந்தளிப்பு இந்திய முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.


இந்த அநீதியை ஜனநாயக ரீதியாக கண்டிக்கும் வண்ணமாக அலஹாபாத் உயர்நீதிமன்றத்திற்கு செல்லக் கூடிய சூழல் தற்போது இல்லாததால், சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என குடும்பத்துடன் பெருந்திரளாக சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி...



நீதி வேண்டும்! நீதி வேண்டும்! பாபரி பள்ளிவாசல் வழக்கில் நீதி வேண்டும்!


காந்தி வாழ்ந்த தேசமடா! அம்பேத்கர் தந்த சட்டமடா!


மாறிப் போச்சு மாறிப் போச்சு! கட்டப் பஞ்சாயத்தாய் மாறிப் போச்சு!

உடையவனுக்கு ஒரு பங்கு! உடைத்தவனுக்கு 2 பங்கா!


இது நீதியா!! அநீதியா??


ஆபத்து! இது ஆபத்து! நீதித்துறைக்கே ஆபத்து!!


இந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் பாபரி பள்ளியை கட்டுவோம்!


இந்தியாவை வல்லரசாக உருவாக்குவோம்!


என்று விண் முட்டும் கோஷங்களுடன் உறக்க உணர்ச்சிகரமாக குரல் எழுப்பியபடி முற்றுகையிட முனைந்தபோது, காவல் துறையினரால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.


இந்த அறப் போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் S.M.பாக்கர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், யாதவ மகாசபைத் தலைவர் டாக்டர். தேவநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொருளாளர் யூஸுஃப், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், முஸ்லிம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா, தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது, இந்திய தேசிய லீக் அமைப்பாளர் தடா அப்துர் ரஹீம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், துணை பொதுச் செயலாளர் முஹம்மது இக்பால், பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர்களான அப்துல் ஹமீது, அபு ஃபைஸல், இனாயத்துல்லா, முஹம்மது ஷிப்லி, செங்கிஸ்கான், வேளாச்சேரி சிராஜ், அபூ ஆசியா மற்றும் கோவை ஜஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சென்னை மாவட்ட நிர்வாகிகள் யூனுஸ், காஜா கரீமுல்லாஹ், யூஸுஃப்கான், ஹனிஃபா, தாம்பரம் ரஹ்மத்துல்லாஹ், ஹனீஃப், ஹஸன் அலி, ஆவடி ஃபாரூக், ஷான் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.


தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து இதஜ நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். சகோதரிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மண்டபங்களில் சிறை வைக்கப்பட்ட பெண்களுக்கு மாநில பேச்சாளர் மசூதா ஆலிமா உரை நிகழ்த்தினார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP