பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாபெரும் பொதுக்கூட்டம்
8.11.10
கடந்த செப்டம்பர் 30 அன்று பாபரி மஸ்ஜித் நில வழக்கு குறித்து அலகாபாத் உயர் நீதி மன்றம் வெளியிட்ட அநீதியான திர்ப்பு ஒட்டு மொத்த இந்திய மக்களையும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருகிறது.
சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல்,இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இத்தீர்ப்பு சட்ட விரோதமானது, மற்றும் ஒரு சார்பான வரம்பு மீறிய செயல் என நாட்டில்லுள்ள சகோதர சமுகத்தைச் சேர்ந்த நியாயவான்கள் அனைவரும் கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இத்தீர்ப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஒரு மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார அரங்கபொதுக்கூட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நேற்று(07.11.2010) சென்னை, எழும்பூர் சிராஜ் மஹாலில் நடத்தியது.
சரியாக மாலை 7 .00 மணிக்கு தொடங்கிய இந்த பொதுக் கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் எம்.நிஜாம் முஹைதீன் தலைமை தங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக மாநில தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா, உயர் நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.முத்து கிருஷ்ணன் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வழக்கறிஞர் ஏ.முஹமத் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஜிம் அவர்கள் அங்கு குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தினை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
பின்னர் தலைமை உரையாற்றிய மாநில செயலாளர் எம்.நிஜாம் முஹைதீன் அவர்கள் "பாபரி மஸ்ஜித் பிரச்சனையானது முஸ்லிம்களுக்கு ஜனநாயகத்திலும் நீதி வழங்குவதிலும் இருக்கின்ற மிகப்பெரிய இடைவெளியை உண்மைபடுத்துகின்றது. முஸ்லிம்கள் மற்றும் பாபரி மஸ்ஜித் கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் நாம் இத்தகையை போலி ஜனநாயகத்தையும் சமூகநீதி இல்லாமையையும் காண முடியும்" என்று கூறினார்.மேலும் தனது உரையின் போது பாபரி மஸ்ஜித் விவகாரம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தீர்மானங்களையும் அதனை தொடர்ந்து மேற்கொண்ட பணிகளையும் அவர் விவாதித்தார்.
அவரத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மாநில தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பாபரி மஸ்ஜித் சம்மந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் முஸ்லிம்கள் நீதிமன்ற நடவடிக்கையையும்,சட்டரீதியான நடவடிக்கையையும்,மேற்கொண்ட நிலையில்,இந்நிலைக்கு நேர்மாற்றமாக சங்கபரிவார்களின்நிலைஅமைத்துள்ளது.குறிப்பாகவி.ஹெச்.பி.போன்றஇயக்கங்கள் தீர்ப்பு வருவதற்க்குமுன்பே ராமஜென்ம பூமியைப் பற்றி தீர்ப்பு கூறுவதற்கு நீதிமன்றத்திற்கு தகுதியோ, அதிகாரமோ இல்லை என்று கூறி 60 வருடமாக அவர்களும் பங்கேற்ற,நீதிமன்ற நடவடிக்கையை கேலி கூத்தாக்கினர் நீதிமன்ற நடவடிக்கைகளை கொஞ்சமும் சட்டை செய்யாது,ராமர் கோயிலின் நீளம்,அகலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் தீர்மானித்து ராமர் கோயில் கட்ட தேசிய அளவில் பிரச்சரங்களையும் மேற்கொண்டனர்.தமிழகத்தில் பா.ஜ.க. வின் இல. கனேசன் 'தீர்ப்பு எப்படி வந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு உந்து சக்தியாக இருக்கும்'என்று தனது உள்நோக்கத்தை வெளிபடுத்தினார்.
பாபரி மஸ்ஜித் நிலவிவகாரத்தில் இந்துக்களையோ இந்துக்களில் ஒருசாரார் கடவுளாக வணங்கும் ராமரையோ முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை.மாறாக முஸ்லிம்கள்நீதிக்காகபோரடுகின்றகள்.உரிமைக்காககுரலெழுப்புகின்றார்கள்.
ஆனால் சங்பரிவார்கள் இதை திசைதிருப்பியே அரசியல் செய்து ஆட்சியை பிடித்தனர். இந்து சகோதரர்கள் சங்பரிவார் உண்மை முகத்தை புரிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.சங்கபரிவார்களை புறக்கணிக்க வேண்டும்," என்று மாநில தலைவர் குறிப்பிட்டார்.
சிறப்பு பேச்சாளராககலந்து கொண்ட வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன்அவர்கள் தனது உரையின் போது 'உண்மையான நீதி வழங்க வேண்டுமானால் அந்த இடத்தை மீண்டும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்றும் இதுவரை நாட்டில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் ,மதக்கலவரங்களுக்கும் இந்துத்துவா சக்திகள் தான் காரணம்' என்று குற்றம் சாட்டினார்.இறுதியாக 'இந்துத்தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டும் வகையில் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் ' என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
பின்னர் உரையாற்றிய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வழக்கறிஞர் ஏ.முஹமத் யூசுப் தனது உரையில்,"ஆக மொத்தத்தில் இந்தத் தீர்ப்பை ஆய்வு செய்து பார்க்கும் போது மிகப்பெரிய அநீதி முஸ்லிம்களுக்கு மீண்டும் இந்த நீதிமன்றத்தில் இழைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.இது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போல் தெரியவில்லை. சட்ட நடைமுறைகளையும் இயற்கை நீதிக் கோட்பாடுகளையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு ஏதோ ஆன்மிக வழங்கப்பட்ட தீர்ப்பாகவே தெரிகின்றது," என்று கூறினார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் பாபரி மஸ்ஜித் உருவம் பொறிக்கப்பட்ட சாவிகொத்து(கீ செயின்)வழங்கப்பட்டது.
இறுதியாக சென்னை மாவட்ட செயலாளர் இ.முஹம்மது சாஹித் அவர்கள் நன்றியுரை கூறினார்.
0 comments:
Post a Comment