தியாக திருநாள் வாழ்த்து
16.11.10
அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை வாய்ஸ் வாசகர்கள் மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டாக்hள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!" என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!" எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.
பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாம் விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்" என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment