ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு நவம்பர் 21 முதல் 28 வரை தேசிய பொது சுகாதார வாரம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.

சுமார் 110 கோடி மக்கள் வாழும் நம் இந்தியா திருநாட்டில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழவும் அதன் மூலம் நம் தேசம் வலிமை பெறவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு தழுவிய பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.
நவம்பர் 21-ம் தேதி அன்று மாலை 4.00 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுகாதார விழிப்புணர்வு பேரணியை அதிராம்பட்டினம் நகர தலைவர் U.அப்துர் ரஹ்மான் தொடங்கி வைத்தார் பேரணி தக்வா பள்ளிவாசல் அருகிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தை அடைந்தது அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக A.T.அப்துல்லாஹ் மற்றும் முகம்மது ஹனிஃபா அவர்கள் உரையாற்றினார்கள் இப்பேரணியில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்
அதிரை நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசிய பொது சுகாதார வாரத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள்.
நவம்பர் 22:யோகா மற்றும் உடற்பயிற்சி வகுப்பு(மாலை 4:30) ஜும்ஆ பள்ளி மைதானம் மேலத்தெரு,அதிரை.
நவம்பர் 23:உடற்பயிற்சி வகுப்பு(மாலை 4:30)கடற்கரைத்தெரு,அதிரை.
நவம்பர் 24:ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நாடகம்(மாலை 6:25)செக்கடிமேடு,அதிரை.
நவம்பர் 25:ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நாடகம்(மாலை 5:00)பழைய போஸ்ட்ஆபீஸ் ரோடு,அதிரை.
நவம்பர் 28:இலவச மருத்துவ முகாம்
இடம்:சமுதாய கூடம்(காவல் நிலையம்)எதிரில்,அதிரை
நேரம்:காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை
அதனை தொடர்ந்து ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மாலை 4:30க்கு நடைபெறும்
0 comments:
Post a Comment