"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


டெல்லியில் பள்ளிவாசல் பட்டப்பகலில் இடிக்கப்பட்டது

13.1.11

டில்லி நிஜாமுதீன் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசல் இடிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கி தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.


டில்லியின் தென்கிழக்கு பகுதியில் நிஜாமுதீனுக்கு அருகில் ஜனகபுரா என்ற இடத்திலுள்ள பழங்கால பள்ளிவாசலை டி டி ஏ எனப்படும் டெல்லி அரசாங்க அமைப்பு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது இதனை எதிர்த்த போரட்டக்கரர்களுக்கு எதிராக அவர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது.


சட்டமன்ற உறுப்பினர் தர்வீண்டர் சிங் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர் கூறுகையில் இந்த பள்ளிவாசல் சட்டவிரோதமாக கட்டப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார் .


எனவே சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் காவல்துறை விதித்த தடையை மீறி சென்று இடிக்கப்பட்ட இடத்தில் மதிய நேர தொழுகையை தொழ முயன்ற உள்ளூர்வாசிகள் மீது காவல்துறை அளவுக்கதிகாக பலப்பிரயோகம் செய்ததில் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.


காலை ஆறு மணிக்கு பலத்த பாதுகாப்புடன் டெல்லி டெவெலப்மென்ட் அதாரிட்டி பள்ளிவாசலை இடித்துள்ளது. அதன் துணை இயக்குனர் இந்த பள்ளிவாசல் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று தெரிவித்துள்ளார்


இமாம் புஹாரி அவர்கள் பள்ளிவாசல் வக்ப் நிலத்தின் தான் கட்டப்பட்டுள்ளது இரண்டு நாட்களுக்குள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP