"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

24.3.11

துறைமுகம் தொகுதி, மண்ணடி அங்கப்பன் தெருவில் இருக்கும் ஓலக்கடை மார்க்கெட்டை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சுற்றுப்புறத்தில் வாழும் மக்கள் அன்றாடம் தங்களது வீட்டிற்குத் தேவையான சாமான்கள், காய் கறிகள், மாமிசம் என்று எதுவாயினும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது இந்த ஓலக்கடை மார்க்கெட்டை கடந்து சென்றே ஆக வேண்டும்.


அத்தோடு மட்டுமல்லாம இதன் அருகே இருக்கும் மியாசி மேல் நிலைப்பள்ளியில் தங்கள் வீட்டு குழந்தைகளை விட்டுச் செல்வதற்காவது இந்த மார்க்கெட்டை கடந்து செல்ல வேண்டும். அப்பேற்பட்ட மிக பிரபலாமான இடம் தான் இந்த ஓலக்கடை மார்க்கெட்.


கடந்த காலங்களில் இந்த ஓலக்கடை மார்கெட் ஏரியாவின் நிலை என்ன தெரியுமா? இந்த பகுதியை கடந்து செல்பவர்கள் தங்களது மூக்கை மூடிக்கொண்டு செல்லாமல் இருக்கவே முடியாது என்று சவால் விட்டு கூறலாம். ஏனென்றால் இதை கடந்து செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு தான் செல்லவேண்டும், அந்த அளவிற்கு அங்கே துற்நாற்றம் கடுமையாக வீசும். அதோடு மட்டுமல்லாமல் அங்கே தெரு ஓரங்களில் வசிக்கும் வாசிகளின் கழிப்பிடம், குளியலறை, சமயல் அறை, என்று ஆரம்பித்து படுக்கைஅறை வரை இந்த ஓலக்கடை மார்கெட் அருகே தான். அது மட்டுமா? மியாசி பள்ளிக்குள் நுழையும் பள்ளி மாணவ மாணவிகள் எல்லா அசிங்கங்களையும் மிதித்து விட்டுத்தான் பள்ளிக்குள்ளேயே நுழைய முடியும். அந்த அளவிற்கு அந்த பகுதியே நாசகரமாக காட்சி அளிக்கும்.


இதை ஏன் இப்போது கூற வேண்டும் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இதனால் வரை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க அரசாங்கமோ, அல்லது தற்போது நான் இந்த தொகுதியில் வென்றால் தொகுதிக்கு அது செய்து தருவேன்! தொகுதிக்கு இது செய்து தருவேன்! என்று கூப்பாடு போடுபவர்களோ, அல்லது அந்தப் பகுதியில் கவுன்சிலராக பல நாட்களாக இருந்து வருபவரோ எவராயினும் இதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை.


இப்படிப்பட்ட அசுத்தங்களின் காரணமாக பள்ளி குழந்தைகள் உட்பட அதன் அருகே வசிக்கும் பல மக்களுக்கும், மலேரியா, டைஃபாய்டு போன்ற நோயால் தாக்கப்பட்டு சிரமப்பட்டார்கள் என்பதை பல பேர் அறிவார்கள். இறுதியாக இந்த பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ -ன் துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்களும் அவரோடு சேர்ந்து கொண்டு பல உறுப்பினர்கள் மற்றும் அஷ்ரப் பள்ளி நிர்வாகிகள் என பல பேர் இதற்காக அரசாங்கத்தை அனுகினார்கள்.


கார்பரேஷன் காரர்கள் முதல் சென்னை மேயர் சுப்ரமணியம் வரை சந்தித்து இதனை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுத்துதர கோரினார்கள். சொன்னவுடன் கேட்பதற்கு நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா? நாங்கள் அரசியலுக்கு வந்ததே சுரண்டுவதற்குதான்! என்று சொல்லாமல் சொல்லினர் தங்களது செயல்பாடுகளின் மூலம்.


அவர்கள் செய்யவில்லை என்றால் என்ன? நாம் செய்வோம் அதற்குத்தானே கட்சியை துவக்கியுள்ளோம் என்ற அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ -ன் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் தலைமையில் ஓலக்கடை மார்கெட் கிளை உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பணியை கையில் எடுத்தனர்.


தங்களது சொந்தப் பணத்தை செலவழித்து பிரச்சனைக்குரிய அந்த பகுதியில் படுத்து தூங்கும் அளவிற்கு சுத்தப்படுத்தினார்கள். அவர்கள் அந்த பணியை மேற்கொள்ளும் போது அந்தப்பகுதியை கடந்து சென்றவர்கள் எஸ்.டி.பி.ஐ -ன் செயல்பாட்டை வெகுவாக பாராட்டினார்கள். இன்று அது அழகான முறையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது. குப்பைகளை போட வேண்டிய இடத்தில் கொட்டப்பட்டும், அதை தினமும் அகற்றப்பட்டும் வருகிறது.


எஸ்.டி.பி.ஐ ஆட்சிக்கு வராமலேயே இத்தகைய பணிகளை செய்கிறது என்றுச்சொன்னால், ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்தது என்றுச்சொன்னால் பல மக்கள் நலப்பணித்திட்டங்களை செயல்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதை பார்ப்பவர்கள் துறைமுகத்தில் வசிப்பவர்களாக இருந்தால் நன்கு சிந்திக்கவும். உங்களது ஓட்டு யாருக்கு? நற்பணிகளை செய்பவர்களுக்கா? அல்லது ஒன்றுமே செய்யாமல் இனிமேல் தான் செய்வோம் என்று கூறுபவர்களுக்கா? (ஆட்சிக்கு வந்த பின்பும் எதுவும் செய்யப்போரதில்லை! அது வேறு விஷயம்).


நீங்கள் துறைமுகம் தொகுதியில் வசிக்கவில்லையா? உங்களுக்கு தெரிந்த ஒரு நபராவது துறைமுகத்தில் வசித்தால் அவருக்கு தெரியப்படுத்துங்கள்... நாடு வளம் பெற! நாமும் வளம் பெற! சுதந்திரம், நீதி, பாதுகாப்பு கிடைக்க, பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை அடைய நீங்கள் ஆதரிக்க வேண்டிய ஒரே கட்சி SDPI.


கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்!









செய்தி: முத்து

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP