"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று திருப்புமுனைக்காக காத்திருக்கும் தலைநகரம்!

14.11.11

டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் நிறைவும் தருவாயை அடைந்திருக்கிறது. நாடு முழுவதும் நடைபெற்ற இப்பிரச்சாரத்தின் மூலமாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆரவத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.




மாநாட்டின் முக்கியத்துவத்தை பற்றி நடைபெற்ற பிரச்சாரங்கள் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் நடைபெற்றது. சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த பிரச்சாரத்தின் வாயிலாக பெரும்பாலான மக்கள் சமூக நீதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதை நம்மால் காண முடிந்தது.


நாடு முழுவதும் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற தலைப்பில் நாட்டின் பல முக்கிய மாநகரங்களில் நடைபெற்ற கருத்தரங்களிலும் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மற்றும் தாலுகா அளவிலும் மாநாட்டின் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கு வகையில் தெருமுனைக்கூட்டங்கள் மற்றும் சிறு கூட்டங்கள் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மிகக்குறைவாக இருக்கக்கூடிய இடங்களில் கூட மாநாட்டின் பிரச்சாரத்திற்காக நடத்தப்பட்ட பேரணிகளிலும் இன்னி பிற நிகழ்ச்சிகளிலும் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஊடகத்துறை, தொழி நுட்பத்து துறை, இன்ட‌ர்நெட் போன்றவற்றின் மூலமாகவும் மாநாட்டினுடைய செய்திகள் பிரபலமாக்கப்பட்டது.


மாநாடு நடைபெறுவதற்கான நாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. மாநாட்டிற்கான பிரச்சாரங்களை கண்காணிப்பதற்காக ஏற்படுத்திய குழுக்கள் பிரத்யேகமாக தேசத்தின் தலை நகரில் பல இடங்களில் பிரச்சாரத்தை முடிக்கி விட திட்டமிட்டிருக்கிறது. புதுடெல்லியில் பிற இடங்களில் பொதுக்கூட்டங்களும், தெருமுனைக்கூட்டங்களும் நடைபெற இருக்கிறது. மாநாட்டை அறிவிப்பதற்கான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்கள், கையேடுகள் போன்றவற்றின் மூலமாக தலை நகர் முழுவதும் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. தலை நகர் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் வருகின்ற 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக பிரச்சாரக்குழு அறிவித்திருக்கிறது.
மற்றுமொரு ஊக்குவிக்கும் செய்தி எண்ணவெனில், சமூக ஆர்வலர்கள், பிற சமூக இயக்கங்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள், காவல்துறை நிர்வாகம் என அனைத்து தரப்பிலும் ஆதரவு பெறுகிவருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இரயில் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்து வருகின்றனர். டெல்லி மாநகர் முழுவதிலும் மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் சிறமமின்றி பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்து கிடைத்த ஆதரவு மற்றும் எதிர்பார்ப்பின் மூலம் நிச்சயம இந்த மாநாட்டின் லட்சியமான "சமூக நீதி" என்பதை இந்த சமூகம் அடைந்தே தீரும்! இன்ஷா அல்லாஹ்!

இப்படிக்கு,

அனீஸ் அஹமது
ஊடக தொடர்பாளர்
சமூக நீதி மாநாடு (புது டெல்லி)

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP