கலைஞர் தொலைக் காட்சிக்கு சிக்கல்!
16.11.11
கலைஞர் தொலைக் காட்சி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு இன்னும் சில தினங்களில் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமலாக்கப் பிரிவு நடவடிக்கைக் காரணமாக கலைஞர் தொலைக் காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி.பி ரியாலிடி மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ 200 கோடி பணம் மாற்றப் பட்ட விவகாரத்தில் கலைஞர் தொலைக் காட்சி கடனாகப் பெற்றப் பணத்தை வட்டியோடு சேர்த்து ரூ 214 கோடியாக திருப்பிச் செலுத்தப் பட்டது என்று கூறி வந்தது. எனினும் சி.பி.ஐ தரப்பு கலைஞர் தொலைக் காட்சியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை.
டி.பி.ரியாலிடி மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கலைஞர் தொலைக் காட்சிக்கு பணம் பரிவர்த்தனை செய்யப் பட்டதில் அமலாக்கப் பிரிவும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
டி.பி.ரியாலிடி நிறுவனத்தின் உரிமையாளரான ஷாஹித் உஸ்மான் பல்வாவுக்குச் சொந்தமான 4 நிறுவனங்களின் 233 .55 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்த நிலையில் தற்போது கலைஞர் தொலைக் காட்சி, குசெவ்கான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபில்ஸ் , சினியுக் நிறுவனங்களின் ரூ 13 .5 கோடி சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் அமலாக்கப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
விரைவில் இதற்கான உத்தரவை அமலாக்கப் பிரிவு பிறப்பிக்கும் என்று தெரிகிறது.
நன்றி: இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment