அஜ்மீர் குண்டுவெடிப்பு:சுரேஷ் நாயர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு
11.2.12
புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் ஹிந்துத்துவா தீவிரவாதி கேரளாவைச் சார்ந்த சுரேஷ் நாயரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜன்சி அறிவித்துள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், மொடாஸா குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமறைவாக இருந்து வரும் இதர நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கும் என்.ஐ.ஏ பரிசு அறிவித்துள்ளது.
சுரேஷ் நாயரின் புகைப்படமும், குஜராத் முகவரியும் இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா என்ற ராமச்சந்திரா, அமித் என்ற அசோக், மேஹுல் என்ற மஹேஷ் பாய், சுரேஷ் நாயர் ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. இவர்களில் சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் 5 லட்சம் ரூபாய் வீதம் பரிசு அளிப்பதாக என்.ஐ.ஏ ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்பொழுது பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாய் வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2007 அக்டோபர் 11-ஆம் தேதி அஜ்மீரில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். கொலைச் செய்யப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்குமான சுனில் ஜோஷியிடம் இருந்து 2007 அக்டோபர் 10-ஆம் தேதி வெடிக்குண்டை வாங்கி அஜ்மீருக்கு கொண்டு வந்து தர்காவிற்குள் வைத்தது சுரேஷ் நாயர், மேஹுல், பாவேஷ் பட்டேல் ஆகியோர் என என்.ஐ.ஏவும், ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் கண்டுபிடித்தன. குண்டுவெடிப்புகளின் ரகசியம் வெளியே கசியாமல் இருக்க சுனில் ஜோஷியை கொலைச்செய்த வழக்கிலும் மேஹுல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குஜராத்தில் வசித்துவந்த சுரேஷ் போலீஸ் விசாரணையை துவங்கிய பிறகு தலைமறைவாகிவிட்டார். சுரேஷ் நாயர் உள்பட 5 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிக்க விரும்புபவர்கள் ஹைதராபாத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலோ அல்லது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ தலைமையகத்திலோ தகவலை அளிக்கலாம் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
கீழ்கண்ட மொபைல் எண்களில் தகவல் அளிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்:
9654447345, 9654446146, 9868815026, 01140623805, 01129947037,04027764488,+91 8285 100100
அல்லது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர் கொள்ளலாம்:
assistance.nia @ gov.in
போஸ்டல் முகவரி(Postal Address )
4th Floor, Splendor Forum,
District Centre, Jasola,
New Delhi – 110 025.
ஐந்தடி ஏழு இஞ்ச் உயரம், நீண்ட முகம், வெள்ளை நிறம், கிட்டத்தட்ட 36 வயது உள்ளிட்ட விபரங்களும் என்.ஐ.ஏவின் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
சுரேஷ் நாயரின் புகைப்படம் முதன் முதலாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதர நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் விபரங்களை அளிக்கவும் இதே முகவரி மற்றும் ஃபோன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்குகளில் அமித் என்ற அசோக் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரின்ஸ், சன்னி, அமித் டோட்டாலா, அஸ்வினி சவுஹான் ஆகிய பெயர்களில் அமீத் சூட்டியிருந்ததாக என்.ஐ.ஏ கூறுகிறது. அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்குகளில் மேஹுல், மஃபத் பாய், மஹேஷ் பாய், கனஷ்யாம் ஆகிய பெயர்களை சூட்டியிருந்ததாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கூறுகிறது.
நன்றி:தூது ஆன்லைன்
0 comments:
Post a Comment