ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம் 2012
15.4.12
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
இன்று நோயில்லா மனிதர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவையெல்லாம் இன்று சாதாரணமாகிவிட்டன. சிறுவர்களுக்குக் கூட நெஞ்சுவலி ஏற்படும் அவல நிலை.
குடும்பத்தில், பணியில், சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மனிதன் திண்டாடுகின்றான். இவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க முடியாமல் தவிக்கின்றான்.
ஏன் இந்த நிலை?
நமது உணவுப் பழக்கமும், வாழ்க்கைத் தடமும் மாறிப் போய்விட்டன. எங்கும் அவசரம்! எதிலும் அவசரம்!
இதனை மாற்றுவது எப்படி? இந்த அவசர உலகுக்கு ஈடு கொடுப்பது எப்படி?
உங்கள் குடும்பத்தாரின் உடல் நலம் உங்கள் கையிலா? மருத்துவரின் கையிலா?
ஆரோக்கியமான அழகிய குடும்பம் அமைத்திட…
இன்பமயமான இஸ்லாமிய குடும்பம் என்ற கனவு நனவாகிட...
இதோ ஓர் அரிய வாய்ப்பு!
ஆரோக்கியமான இஸ்லாமிய வாழ்வு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்காக அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளைச் செய்து வரும் Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்துள்ள இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் அமீரகவாழ் குடும்பங்களும், தனிநபர்களும் திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேநீர்+இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் தனியாகப் பராமரிக்கப்படுவர். அவர்களுக்குத் தனியாகப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். தனிநபர்களுக்கு (Bachelors) அனுமதி உண்டு.
0 comments:
Post a Comment