பலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்குமாறு தீவிரவாத ஸியோனிஸ மதபோதகர் அழைப்பு
19.5.10
நப்லஸ் – யூதக் குடியேற்றமொன்று சிதறுண்டு போகும் நிலை தோன்றுகையில், பலஸ்தீன்

யூத ஆக்கிரமிப்பாளரின் அடாவடித்தனம்
பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து அவர்களின் உடைமைகளைச் சூறையாடுவதற்கு யூதர்கள் முன்வரவேண்டும் என்று தீவிரவாத ஸியோனிஸ மதபோதகரான யிட்சாக் ஷாபிரா மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியேற்றவாசிகளை நோக்கி அழைப்புவிடுத்துள்ளார்.
யூதக் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கான ‘விலை’யைப் பலஸ்தீனர்கள் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்று ஸாபிரா குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையுடன் மட்டுப்படுத்தி விடாமல், ஜெரூசலம், கலீலி, நெகவ் என்று எங்கெல்லாம் பலஸ்தீனர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத ஸியோனிஸ மதபோதகர் யிட்சாக் ஷாபிரா
அண்மைக் காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் ஒத்துழைப்போடு, பலஸ்தீன் பொதுமக்கள் மீது யூத ஆக்கிரமிப்பாளர்கள் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:
PIC
0 comments:
Post a Comment